தற்போது, பல பகுதிகளில் இறப்பர் பொருட்கள் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், தாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இறப்பர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை உள்ளிட்ட இறப்பர் அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டங்களில் இறப்பர் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இறப்பரின் விலையும் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறப்பருக்கான தேவை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளதாக இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் மாதவ வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையால் 150 மெட்ரிக் தொன் இரப்பர் கையிருப்புக்கு மேல் விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகளிடம் உள்ள இறப்பர் இருப்பை கொள்வனவு செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்

