நூற்றுக்கணக்கான அரச ஊழியர்கள் நடுத்தெருவில்

அரச வருமானத்திற்கு முக்கியம் வாய்ந்த அரச நிறுவனங்களில் பாரியளவிலான ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் பற்றாக்குறை மிக அதிகமாக காணப்படுகின்றது. சுங்க வரி, கலால் வரி இரண்டிலும் போதுமான ஊழியர்கள் இல்லை. நானூறு ஐநூறு ஊழியர்களை நாங்கள் தற்போது ஆட்சேர்க்க முடியாது.

இந்த நாட்டில் அதிகளவான பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கு பொருத்தமற்ற இடங்களில் தொழில் புரிகின்றார்கள். சிறந்த போட்டி பரீட்சை ஒன்றை நடத்தி வெளிப்படைத் தன்மையுடன் மிகவும் திறமையான இளைஞர்களை தெரிவு செய்வதற்கு நான் யோசனை முன்வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply