அரச ஊடகமான ரூபவாஹினி தனது நிறுவன உத்தியோகபூர்வ இலச்சினையை மீண்டும் முன்று மொழியிலும் மாற்றியுள்ளது.
கடந்த சில மாதங்களாக Logoஇல் தனி சிங்களத்தில் மாற்றி இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இன்று மூன்று மொழிகளிலும் மாற்றப்பட்டுள்ளது.
தனி சிங்களத்தில் மாற்றியமைக்கு எதிராக Dhanuka Rananjaka Kahandagamage என்ற சகோதர மொழி இளைஞனும் தொலைக்காட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்துடன் மகஜரும் கையளித்தார்.

இலச்சினை மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர் ஒரு வார்த்தையை உரக்க பேசாமால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நான் வெற்றிபெற்றுள்ளேன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்





