இலங்கை அகதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை -ஸ்ரீதர் கருத்து!

நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்ய மாநில செயலர் ஸ்ரீதர் இன்றையதினம் யாழில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் தற்போது பாரிய மாற்றங்களை காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு மரியாதையுடன் கண்ணியத்துடன் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கின்றதா என ஆராய்வதுடன் இலங்கை அகதிகள் விருப்பத்துடன் மீண்டும் இலங்கை வர அவர்கள் தயாராக இருக்கின்றார்களா? அவர்களது மனநிலை தொடர்பிலும் ஆராய்வோம்.

கடந்த வாரம் மதுரை உயர் நீதிமன்றம் இலங்கையை சேர்ந்த அகதிகளின் முகாமில் பிறந்த குழந்தைகள் அத்தனையும் இந்திய பிரஜைகள் எனவும் அவர்களுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு விசேட தொழிற் பயிற்சிகளை வழங்கி அவர்களை மற்ற நாடுகளுக்கு கொண்டு வந்து அவர்களை கண்ணியத்துடன் வேலைவாய்ப்பை பெற்றுக்ககொடுப்பதே எனது பயணத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கையில் ,

ஈழத்தமிழர் விடயத்தில் மக்கள் நீதிமன்றத்தின் பயன்பாடு என்ன? என்பது தொடர்பில் கேட்கப்பட்ட போது ,

முதன்முதலில் ஈழப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கறுப்புச் சட்டை அணிந்து நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். அதேவேளை மக்களை மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளாத கட்சி தான் மக்கள் நீதி மய்யம்.

மக்கள் நீதி மய்யம் இந்தியாவில் உள்ள இலங்கைத் அகதிகளின் முகாமிற்கு நேரில் சென்று ஆராய்ந்ததன் பிற்பாடு தமிழக முதலமைச்சரால் 350 கோடி செலவில் அகதிகளுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இலங்கைக்கு நாம் வந்திருப்பது இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை இடுவதற்காகவே. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இங்கு வந்து மறுபடியும் குடியேறுவதற்குரிய சூழல் நிலவுகின்றது.

யாழ்ப்பாணம் தற்போது துாய்மையான இடமாகவும் சென்னையை விட மிகவும் அமைதியாகவும் இருக்கின்றது. அதேவேளை இலங்கைக்கு என்றும் இந்தியாவே நட்பு நாடாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைதுசெய்வதை விடுத்து சுட்டுக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையான மீனவர்கள் மீன்பிடிக்கும் போது தவறாக எல்லை தாண்டிவந்துவிட்டால் அவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply