அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலையிலுள்ள சமையல் அறையில் அவர் பணியாற்றியிருந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான பரிசோதனைகளுக்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்





