யாழ். பல்கலைக் கழக பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் இன்று

யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின மூன்றாம் நாள் – ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாயுள்ளது.

பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத் தலைமை தாங்குகின்றார்.

நேற்று முன்தினம் 06 ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள்களில் எட்டு அமர்வுகளாக இடம்பெற்று வரும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.

இதேவேளை இன்றைய அமர்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி.காண்டீபன், நிதியாளர் கே. சுரேஸ்குமார், பதில் நூலகர் எஸ்.கேதீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விருந்தினர்கள், பட்டம் பெறும் மாணவர்கள் , பெற்றோர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply