களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச சிறுவர்தினக் கொண்டாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ‘விளையாடி மகிழ்வோம்” சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஓந்தாச்சிமடம் கடற்கரையில் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், 100 வயதை பூர்த்தி செய்த களுவாஞ்சிகுடி வடக்கு,01 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த திருமதி. சங்குபதி தங்கராசா அவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.புவனேஸ்வரி ஜீவகுமார், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply