உருகுணை பல்கலைக்கழகத்தின் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

உருகுணை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உருகுணை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்களுக்கு பகிடி வதை மேற்கொண்டமையினால் இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் சுமார் 200 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு இவ்வாறு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலையின் பதில் பீடாதிபதி பேராசிரியர் சன்ன யஹத்துகொட தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply