தேர்தல்கள் கால தாமதமின்றி நடத்தப்படவேண்டும் -எம்.எம்.மஹ்தி கோரிக்கை!

மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தாமதமின்றி நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் எம் மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(11) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேர்தல்களை முகங்கொடுப்பதற்கு பயந்து வீணாக காலம் தாழ்த்துவது ஜனநாயக உரிமை மீறலாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மக்களின் ஆணைக்கு முரணாக தோல்வி அடைந்தவர்கள் கூட தவிசாளராக தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே ஒரு சிறந்த முறையில் அல்லது பழைய விகிதாசார முறையில் தாமதமின்றி தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply