இரண்டு வாரமாகத் தொடரும் கிராஞ்சி மீனவர்களின் போராட்டம்

கிராஞ்சி இலவன்குடா மடு மாதா ஆலயத்துக்கு முன்பாக மீனவர்களும் பெண்களும் இணைந்துகடந்த 12 நாட்களாக சத்தியா கிரக போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றனர்.

தமது பிரதேசத்தில் இயற்கையாக அட்டை வளர்க்கின்ற பிரதேசத்தில் ஒருசிலர் அட்டை பண்ணைகளை செய்து வருகின்றனர். இதனால் கடந்த 45 வருடகாலமாக பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தங்கள் தொழிலை முற்று முழுவதுமாக இழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதேவேளை பெண்கள், குறிப்பாக குடும்ப தலைமைத்துவ பெண்கள் தங்கள் கரங்களால் அட்டை மற்றும் நண்டு தொழிலில் ஈடுபட்டு வந்த வேளை தற்போது பெண்கள் பொருளாதார ரீதியில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தபோது இவர்களுக்கு எதிராக பல குற்றங்களை சுமத்தி வழக்குத் தாக்கல் செய்து,இன்று அதற்கான விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரிகளும் எந்தவிதமான விசாரனைகளையும் மேற்கொள்ளவில்லை. போராட்டத்தில் ஈடுப்படுகிறவர்கள் கடந்தத 4ம் திகதி யாழ்பாணத்தில் உள்ள மனித உரிமை செயலகத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ள அதேவேளை எதிர்வரும் 14ம் திகதி இது தொடர்பான விசாரனைக்கு போராட்டகாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய மீனவ ஒத்துழைப்பின் திட்ட இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன், பெண்கள் திட்ட இணைப்பாளர் லவீனா ஹசந்தி, மாவட்ட இணைப்பாளர் ஆ. சதீஸ்வரன், செயற்பாட்டாளர் ஜெயராணி மற்றும் “அரும்பு மாவட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் போராட்ட இடத்திற்கு சென்று தங்கள் ஒத்துழைப்பை வழங்கிய அதேவேளை எதிர்காலத்தில் நடைப்பெறும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை தருவதாக தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply