வாய்க்கால் பிரச்சினை வாள் வெட்டுடன் நிறைவு: யாழில் சம்பவம்!

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கந்தசாமி கஜேந்திரன்(36) என்பவர் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply