தென்மராட்சி, தனங்கிளப்பு, அறுகுவெளி கிராமத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று வலி. கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியேறியதை அடுத்து, அயலவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸார் வீட்டை உடைத்து பாரத்தபோது குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.
புத்தூரை சேர்ந்த 51 வயதுடைய வலி. கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



