கனடாவில் கோரவிபத்து யாழ்.சகோதரர்கள் சாவு

கனடாவில் மார்கம் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற கோரவிபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ட்ரக் வண்டியொன்றும் மற்றுமொரு வாகனமும் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மற்றொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்த விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply