இலங்கையில் 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்த சீன தம்பதியினரை விமான நிலையத்தில் வைத்து மடக்கிப்பிடிப்பு!

ஸ்போர்ட்ஸ் செயின் என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சீன தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் 35 மற்றும் 25 வயதுடைய கொழும்பு 5 பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply