யாழில் பல கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்பான 23 வயதான நபர் கைது !

யாழில் பல கொள்ளைச்சம்பம் மற்றும் போதைப்பொருள் கடத்தும் விவகாரம் தொடர்பில் கைதான 23 வயது நபரை கை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். வடமராட்சியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச்சம்பவத்தின் தொட்புடைய நபரே நேற்றுபருத்தித்துளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அல்வாய் பகுதியில் 23 வயதுடைய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 3 பவுன் தாலி, 2 பவுன் செயின், மோட்டார் சைக்கிள் மற்றும் ஐபோன் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply