கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை!

கிளிநொச்சி, தருமபுரம் – கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்று மாலை இளம் குடும்பத்தர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இராமையா இராமஜெயம் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில், நோயாளர் காவுவண்டிமூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், தருமபுரம் பொலிசார் மேலதிப விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

Leave a Reply