கடவையை கடக்க முற்பட்ட முதியவர் மீது ரயில் மோதி பலி: கொடிகாமத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம், ஒக் 15

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் கொடிகாமம் பகுதியில் கடவையை கடக்க முற்பட்ட வயோதிபருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வயோதிபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் இன்று(15) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

இதில் கொடிகாமத்தைச் சேர்ந்த 67 வயதுடையவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply