எரிவாயு சிலிண்டர் என்பது வெடிகுண்டு அல்ல. அவ்வாறு வெடிப்பதை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சிலிண்டரில் எரிவாயு எவ்வளவு இருந்தாலும் ரெகுரலேட்டர் மூலம் ஒரு சரியான அளவை தான் வெளியேற்றும்.
யாரிடத்திலும் தவறான எண்ணம் இருந்தால் எரிவாயு சிலிண்டரின் பாவனை அதிகரிக்க அதிகரிக்க எரிவாயு வெளிவரும் அளவு அதிகரிக்கும் என்பது தவறான கருத்தாகும்.
எரிவாயு சிலிண்டரில் கசிகிறதா என்பதைப் பரிசோதனை செய்து பார்க்க சீல் பொறிக்கப்பட்ட பகுதியை அகற்றுவதற்கு முன்னர் சீல் பொறிக்கப்பட்டுள்ள சுற்றுப்பகுதிக்கு சவக்கார நுரைகளை விசிற வேண்டும்.
அதன் பின்னர் எரிவாயு கசிகிறதா என்று பார்க்க வேண்டும்.
எரிவாயு அடுப்பை திறப்பதற்கு முன்னர் எரிவாயு சிலிண்டரை திறந்து சவக்கார நுரைகளைச் சகல இடங்களுக்கும் விசிறி எரிவாயு கசிவு ஏற்படுகின்றதாக என பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதன்பின்னர் தான் எரிவாயு அடுப்பை மூட்ட வேண்டும்.
எரிவாயு சிலிண்டர் என்பது வெடிகுண்டு அல்ல எனவும்இ எந்த அழுத்தத்தையும் தாங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



