யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து : முதியவர் ஒருவர் பலி!

யாழில் புகையிரத வழுதியை கடக்க முயன்ற வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று (15) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொடிகாமம் கண்டி வீதியைச் சேர்ந்த கந்தகுட்டி சுந்தரம் (வயது-67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாதவில் இருந்து கொழும்பு நோக்கி தபால் புகையிரதம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply