இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதை நோக்கி பயணம்! இந்திய வெளிவிவகார செயலாளர்

இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிறிங்லா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடுசெய்திருந்த பாரத்75 இந்தியாவை வலுப்படுத்துதல் என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

2021 இன் முதல் காலாண்டு பகுதியில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 20வீத வளர்ச்சியை காண்பித்தது.

சவாலனசூழ்நிலை நிலவுகின்ற போதிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிக்கின்றது.

இந்த சம்மேளனம் உருவாக்கப்பட்ட காலப்பகுதியில் சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பு என்பது ஒரு கனவாக மாத்திரம் காணப்பட்டது.

சுதந்திரம் பிரிவினை உருவாகிவரும் நாட்டின் போராட்டங்கள் போன்றன எதிர்காலத்திற்கான விடயங்களாக காணப்பட்டன.

பெருந்தொற்றிற்கு பிந்தைய பொருளாதார நிலை தற்போதைய பொருளாதார நிலையை விட வித்தியாசமானதாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மறுசமநிலைப்படுத்துதல் அழைக்கப்படுவதற்கு மத்தியில் பொருளாதார மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

அத்துடன், இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் உயர் பொருளாதார வளர்ச்சி உலகின் பொருளாதார செயற்பாடுகளின் மையமாக ஆசியாவை மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது புவிசார் அரசியல் புவிசார் பொருளாதாரவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளதோடு, அமெரிக்கா கரையிலிருந்து ஆபிரிக்காவின் கிழக்கு கரையோரம் வரை நீளும் இந்தியாவை உள்ளடக்கிய இந்தோ பசுபிக் பிராந்தியம் தற்போது உலகின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய பகுதியாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த பகுதி உலக பொருளாதாரத்தின் 60 வீதத்தை உற்பத்தி செய்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply