அதிபர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு! காரைநகரில் சம்பவம்

யாழ். காரைநகர் பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் தாக்கியதில் க.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்
னெடுத்துள்ளமையுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமைஇ குறித்த மாணவனை அதிபர் தாக்கியுள்ளார்.

இதையடுத்து மாணவனின் காதில் ஏற்பட்ட வலி காரணமாகஇ யாழ். போதனா வைத்தியசாலையில் மறுநாள் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில்இ மாணவனின் ஒரு காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் விசாரணைகள் இடம்பெற்றன.

அத்துடன்இ சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டைப் பெற்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

மேலும்இ சம்பவம் தொடர்பில் அறிந்த வடக்கு மாகாண கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையிடுமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாணவனை அழைத்த அதிபர் காற்சட்டை பொக்கெற்றுக்குள் கைகளை வைத்திருக் குமாறு தெரிவித்துவிட்டு 7 தடவைகள் காதுகளில் அறைந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ மாணவர்களை அங்கங்கள் பலவீனமடையும் வகையில் தாக்குவது சித்திரவதை என்ற அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply