காலநிலையை அறிவிக்க புதிய அலுவலகம் திறப்பு

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இலங்கை இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த அலுவலகம் நிறுவப்படுகிறது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவான் விஜயவர்தன தலைமையில் அந்த அலுவலகத்தின் கடமைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்கால காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் உலகில் பல நாடுகள் இவ்வாறான செயலகங்களை நிறுவியுள்ளதோடு எதிர்கால காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் அந்த நாடுகளும் நிதி சேகரித்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவான் விஜயவர்தன குறிப்பிட்டார்.

இந்த செயலகத்தை அமைப்பதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று இலங்கையில் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்களை தயாரிப்பதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவவும், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சட்டமூலத்தை உருவாக்கி நிறைவேற்றவும் தீர்மானித்துள்ளார்.

மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரும் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தின் பணிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். .

எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள COP 27 காலநிலை மாற்றம் தொடர்பான உலக மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கவுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply