
இந்த ஆண்டு இறதியில் ஓய்வுபெறவுள்ள அரச ஊழியர்களுக்கு விசேட அறிப்பொன்றை ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம் ஓய்வுபெறும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்புவது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடைமுறையை முறையாக பின்பற்றினால், ஓய்வுபெறும் அரச ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களை ஓய்வு பெறும் நாளில் இருந்து வினைத்திறனாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு இடையில் 60 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து, அரச நிறுவன தலைவர்கள், அரச வங்கிகள் மற்றும் சட்டப்பூர்வ சபைகள் உட்பட வணிக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு, இது தொடர்பான புதிய சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன.

