இளம் புத்தாக்குநராக வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தெரிவு

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் பாடசாலை மாணவ இளம் புத்தாக்குநராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மதுரா அருந்தவம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ ஜெவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறை ஆகியவை இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியது.

இதில் சிறந்த பெண் பாடசாலை மாணவ இளம் புத்தாக்குநராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மதுரா அருந்தவம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சித்தானந்த லியநஹே சிறந்த பெண் புத்தாக்குநருக்கான பதக்கத்தை அணிவித்தார்.

வளர்முக நாடுகளுக்கான பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் தலைவி பேராசிரியர் சுகந்திக்கா சுரேஷ் சான்றிதழை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூதவை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Leave a Reply