
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உறுதியளித்தார்.
தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் இன்று (17) சந்தித்தார்.
இதன்போதே கமல்ஹாசன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
போர், பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கைவாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்கின்றனர்.
மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகின்றோம். அத்துடன் தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது என என சிறீதரன் எம்.பி. கவலை தெரிவித்தார்.
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என கமல்ஹான் தெரிவித்தார்.

