
கொழும்பு மாநகர சபையின் பத்தொன்பது இடங்களில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடுவதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த இடங்களில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் இருந்து பல்வேறு நபர்கள் கட்டணம் வசூலிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் வரை இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி வீதி டூப்ளிகேஷன் வீதி மற்றும் வெள்ளவத்தை நகரைச் சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும், மலே வீதி, ஜவட்டா வீதி, தெமட்டகொட பல்பொருள் அங்காடி, சலவை வத்தை, நவம் மாவத்தை, டி.என். பொன்சேகா மாவத்தை, பாஸ்டியன் மாவத்தை, முத்தையா வீதி, ஆண்டிவால் மாவத்தை, மெகசின் வீதி, ஆனந்த வித்தியாலயத்திற்கு அருகில் ஆலய வீதி, ஜயந்த வீரசேகர மாவத்தை, கீழ் சத்தம் வீதி, மொஹமட் ஷேன் மாவத்தை, முதலாவது குறுக்குத் தெரு, கிவு வீதி, டாசன் வீதி, முதலிகே மாவத்தை மற்றும் கிறிஸ்டி பெரேரா மாவத்தை போன்ற இடங்களிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்

