
Today Rasi Palan 02th December 2021 | இன்றைய ராசிபலன் : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.
ரிஷபம்: சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை நடக்கும் நாள்.
மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
கடகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும் நாள்.
சிம்மம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
கன்னி: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரிய ஒரு சிலருக்கு உதவுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
தனுசு: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மகரம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.
கும்பம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





