நுகேகொடையில் 3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

நுகேகொடை சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 03 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று காலை 6 மணியளவில் கோட்டையில் இருந்து பயணித்த தனியார் பேருந்து, விளக்குகளை அலட்சியப்படுத்தியதன் காரணமாக மேலும் இரு பேருந்துகளுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பேருந்து சாரதி ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், விபத்தை ஏற்படுத்திய  பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply