ஈ.பி.டி.பி.யுடன் இணங்கிய யாழ் மேயர் மணிவண்ணன்!

கடந்த மாதம் கோரம் இன்மை காரணமாக யாழ். மாநகர சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ஈ.பி.டி. பி.யினருடன் பேச்சு நடத்தி அவர்களிடம் வருத்தம் தெரிவித்து சபைக்கூட்டத்தை நடத்தியதுடன், ஜப்பான் தூதரகத்துக்கு நிதி விடுவிப்பதற்கான அனுமதியையும் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 27ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு மாதாந்தக் கூட்டம் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர் களின் சிறப்புரிமையை மீறும் வகையில் முதல்வரும், ஆணையாளரும் ஜப்பானிய தூதரக வாகன விடயத்தில் நடந்து கொண்டமையைக் குறித்து அதிருப்தியை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் உறுப்பினர்கள் நடந்த விடயம் தவறு என்று முதல்வரும், ஆணையாளரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினர்.

எனினும் முதல்வரோ ஆணையாளரோ அது தொடர்பில் வருத்தம் தெரிவிக்காத காரணத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் விடயம் தொடர்பில் முதல்வர் தன்னிச்சையாக அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் கவனத்துக்கு கொண்டுவரத் தவறியதை கண்டித்து ஈ.பி.டி.பியினரதும் சபையிலிருந்து வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசி யக் கட்சியின் உறுப்பினர்களும் சபையி லிருந்து வெளியேறினர். கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் மணிவண்ணன் அணியினர்) உறுப்பினர்களுடன் மட்டும் கூட்டத்தை நடத்த முடியாத நிலையில் முதல்வர் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் நேற்றுக் காலை இடம்பெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. நேற்றுக் காலை சபை அமர்வு ஆரம்பமாக முன்னர் ஈ.பி.டி.பி.யினரு டன் மாநகர மேயர் வி.மணிவண்ணன் தனியாகப் பேச்சு நடத்தினார்.

ஜப்பான் அரசின் நிதியை பயன்படுத்த முடியாமைக்கும் அது தொடர்பாக கடந்த கூட்டத்தில் விவாதித்த கருத்துக்களுக்கு தான் வருந்துவதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங் களும் விவாதங்களும் இடம்பெறாத வகையில் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதனையடுத்து சபை அமர்வுகளில் ஈ.பி.டி.பி.யினர் பங்கேற்றனர். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை.

சபை அமர்வில், வாகனக் கொள்வன வுக்காக ஜப்பான் அரசால் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதில் சபை தவறி ழைத்துள்ளது என்றும் இவ்வாறான தவறுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக முதல்வர் மணிவண்ணன் சபையில் வெளிப்படையாக கருத்து வெளியிட்டார் இதன் பின்னர் நிதியை மீளளிக்க சபை அனுமதி வழங்கியது.

பிறசெய்திகள்

Leave a Reply