பாடசாலைக்கு அண்மையில் பாதகப் போதைப்பாக்கு விற்பனை:ஒருவர் உயிரிழப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடிப் பகுதியில் பலசரக்குக் கடையில் உயிர்கொல்லி போதைப் பாக்கை விற்பனை செய்த 30 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களுக்கு அமைவாக தாவடிப் பகுதிக்கு விரைந்த பொலிஸார்,அங்குள்ள பலசரக்குக் கடையில் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது 390 கிராம் உயிர்கொல்லி போதைப் பாக்குகளை பொலிஸார் மீட்டனர்.

கடையின் உரிமையாளரான 30 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டத்துக்குள் பாடசாலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply