
யாழ். மாநகரசபைக் கூட்டத்தில், யாழ். மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை ஒளிப்பதிவு மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் மாநகர சபைக்கு அறியத் தருமிடத்து ஆதாரங்களினை சமர்ப்பிப்பவர்களிற்கு குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் 10%தொகையினை சன்மான தொகையாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் குடியிருப்புக்களுக்குமுன்னுள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும். வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையினால் அதற்குள் குப்பைகளை வீசிவிட்டுச் செல்கின்றார்கள்.
அதற்கு அவ்வீதியில் உள்ள மக்களேபொறுப்பு கூற வேண்டும் என்றும், அவ்வாறு தூய்மையாக பேணாவிடின் அவர்களிடமிருந்துரூபா 3000.00 குற்றப்பணமாக அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி.மணிவிண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிறசெய்திகள்

