திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் பயிரிடப்பட்ட மரக்கறி உற்பத்திகளின் அறுவடை இன்று(19) நடைபெற்றது.
இதன்போது அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே விற்பனைக்காக விடப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம அவர்களின் ஆலோசனைக்கமைய மாவட்டச் செயலகத்தில் “உணவு உற்பத்தியை விருத்தி செய்தல்” எனும் தொனிப் பொருளுக்கு இணங்க பயன்படுத்தப் படாமல் காணப்பட்ட பிரதேசத்தில் மாவட்ட விவசாயப் பிரிவு மூலம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனுடைய அறுவடை இதற்கு முன்னர் ஒரு தடவை நடைபெற்றுள்ளதுடன் இரண்டாவது தடவையான அறுவடையே இன்றைய தினம் நடைபெற்றது.
மிளகாய், கத்தரி, தக்காளி மற்றும் கறிமிளகாய் ஆகிய மரக்கறிகள் இவ்வாறு அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பிறசெய்திகள்

