உத்தர லங்கா சபாவுடன் ஜனநாயக இடது சாரி முன்னணி இணைந்து செயற்படும் என்பது கேள்விக்குறியாகும்-இராசிக் ரியாக்!

ஜனநாயக இடது சரி முன்னணி பிரிந்து விமல் வீரவன்ச தலைமையில் கூட்டாக இணைந்து
“உத்தர லங்கா சபாவ” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட ஜனநாயக இடது சாரி முன்னணி -மாவட்ட அமைப்பாளர் இராசிக் ரியாக்
கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்ற கூடிய அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒரு விடுதலை தரக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய அமைப்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டது

ஆனால் கடந்த காலங்களை பார்க்கும் போது, ஜனநாயக முன்னணியுடன் சேர்ந்து செயற்படக்கூடிய தன்மை காணப்பட்டாலும் சரியாக செயற்பட தவறியுள்ளது.

அதாவது விமல் வீரவன்ச, அத்துரலிய போன்றவர்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

எவ்வாறெனில் முஸ்லீம்களின் வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே உத்தர லங்கா சபாவுடன் ஜனநாயக இடது சாரி முன்னணி எவ்வாறு இணைந்து செயற்படும் என்பது கேள்விக்குறியாகும்.

எனவே உத்தர லங்கா சபாவ செயற்படுவதற்கு திருகோணமலை மாவட்ட ஜனநாயக இடது சாரி முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply