சஹ்ரான் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும் தற்கொலைத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் பிரதிவாதியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை நீதிமன்றில் பிரசன்னப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின், வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply