பழைய வீட்டை காலி செய்து விட்டு புதிய வீட்டில் குடியேறிய மைனா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி. தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா பணியை தொடங்கினார். அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் அவரைத் தேடி வர, நந்தினி சென்னைக்கு குடியேறினார்.

ஒரு சில படங்களிலும் நடித்தார். ஆனால் அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணண் மீனாட்சி சீரியல் தான். அதில் ஹீரோயின் தோழியாக மைனா கேரக்டரில் மதுரை பாஷை பேசி அவர் நடித்தது அவருக்கு நிறைய ரசிகர்களை தேடிக் கொடுத்தது.

பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய வலி, பின்னடைவுகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு தனது அடுத்த இன்னிங்சை தொடங்கினார் நந்தினி.

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான். தற்போது இருவரும் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.

அத்துடன் ”மைனா விங்ஸ்” என்ற யூடியூப் சேனைலையும் வைத்துள்ளார். அதில் தனது அன்றாட நிகழ்வுகளை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார். அப்படி மைனா பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது யூடியூபில் டிரெண்டாகி உள்ளது.

அதில் அவரது கணவர் யோகேஷ், நாங்கள் புதிய வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகிறோம் என்று கூறி, மைனா செய்யும் வேலைகளை காட்டுகிறார். மைனா கபோர்டில் இருக்கும் துணிகளை எடுத்து மடித்து அட்டைப்பெட்டிக்குள் வைக்கிறார்.

அவர்களது நண்பர்களும் கூட இருக்கின்றனர். அப்போது மைனா பல்லி என்று சும்மா பயங்காட்ட யோகேஷ் உண்மையாகவே பயந்து குதிக்கிறார். இப்படி மாறிமாறி அமர்க்களம் செய்கின்றனர்.

பின்னர் வீடை காலி செய்துவிட்டு அனைவரும் டிநகரில் உள்ள புதிய வீட்டுக்கு செல்கின்றனர். இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ!

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply