
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் அம்மா வேடத்தில் அதாவது சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரவீனா லலிதா பாய்.
வெள்ளித்திரையில் உலகில் பல்வேறு படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் தளபதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பிரவீனா போலவே நடித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அவர்கள் பிரவீணாவின் புகைப் படங்களை மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிரவீனா வெளியிட்டுள்ள அறிக்கை அவர்களை நான் எச்சரித்தும் அவர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை.
இதனால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். தயவு செய்து அந்த ஐடியை பின் தொடர்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் என்னை பின்தொடர்பவர்களுக்கும் என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் தவறான புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். இப்படிக்கு உண்மையான பிரவீனா என தெரிவித்துள்ளார்.
பிரவீனா போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





