இன்றைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு!

இன்று (20) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்படும் வரை இலங்கையில் 12 திட்டங்களுக்கான நிதியுதவியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா இடைநிறுத்தியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட திட்டங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டமும் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்பட்டதன் பின்னர், திட்டங்களுக்கான நிதியுதவியை மீள ஆரம்பிக்கத் தயார் ஜெய்க்கா நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதிமொழியை ஜெய்க்கா விரும்புவதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூர் நிதியுதவியுடன் ஜெய்க்கா திட்டத்தின் சில பணிகள் தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply