
இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் இலங்கை தமிழர்களுக்கும் பொருந்தும் என்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவால் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 1980களில் தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற உள் நாட்டுப் போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 108 அகதிகள் முகாம்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் இந் திய குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர்.
இதனிடையே இந்தியாவில் 2020 ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ். ஆப்கானிஸ்தான்,இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள், ஆகிய அயல் நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது.
இலங்கையில் சிறுபான்மை மதமாக உள்ள இந்து மதத்தினர் சேர்க்கப்படவில்லை. இவர்களையும் இச்சட்டத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட் டது.
இந்நிலையில், இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் இலங்கை தமிழர்களுக்கும் பொருந்தும் என உயர் நீதி மன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் தங் களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் காலம் கணிந்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிற செய்திகள்





