இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 772ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 70 ஆயிரத்து 952ஆக அதிகரித்துள்ளது.
பிறசெய்திகள்





