
கதிர்காமம் – செல்லகதிர்காமம் பகுதியிலுள்ள மாணிக்க கங்கையின் மேல் பகுதியில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார.
நேற்று மதியம் மாணிக்க கங்கையில் நீராடச் சென்றிருந்த நிலையில், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
செல்ல கதிர்காமம் – கொஹொம்பதிகான பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடுமையான சவால்களுக்கு மத்தியில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

