யாழிலுள்ள மூன்று தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த எரிசக்தி திட்டங்களை மூன்றாம் தரப்பினரின் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளில் ஹைபிரிட் எனர்ஜியை உருவாக்கும் திட்டங்களை சைனோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி இடைநிறுத்தியுள்ளதென்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மாலைத்தீவு அரசாங்கத்துடன் அங்குள்ள 12 தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நவம்பர் 29 ஆம் திகதி கையெழுத்தானது என்று மேலும் கூறியது.
இதேவேளை, வடபகுதியில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைக்கானசீன தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






