கொரோனாவின் புதிய பிறழ்வான ஒமிக்ரான் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மரபணு வரிசைமுறைக்கு உட்பட்டாலன்றி மாறுபாட்டையுடைய தொற்றாளர்களை அடையாளம் காண முடியாது.
இந்த பிறழ்வை உடனடியாக அடையாளம் காண முடியாது என்றும், சோதனை விலை அதிகம், இது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, அதிக ஆபத்துள்ள குழுக்கள் கண்டறியப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் பிசிஆர் மாதிரிகள் மரபணுபரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன.
அனைத்து பொது நடவடிக்கைகளும் விமான நிலையங்களுக்குள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






