நாட்டில் மீன்களின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதால் மீனவர்கள் நாளாந்தம் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், மழை காலம் ஆரம்பித்துள்ளதாலும் சந்தைகளுக்கு கூடுதலான கடலுணவுகள் கிடைக்கப்பெறுகின்றன.

அதைவிட தற்போது கௌரிவிரதம் நடைபெறுவதால் அநேகமானோர் கடலுணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே மீன்களின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கிலோ ஆயிரம் ரூபாவாக விற்கப்பட்ட மீன் தற்போது கிலோ 600 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Leave a Reply