கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!

கிரிபத்கொடை – பதிலியாதுடாவ பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

51 வயதுடைய வத்தளை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் 33 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, நேருநுவர – மகிந்தபுர பகுதியில் வீடொன்றிற்குள் மர்மமான முறையில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply