
எரிசக்தி துறையின் மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தேசிய சபைக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபை ஆகிய நிறுவனங்கள் தேசிய சபைக்கு அழைக்கப்பட்டு, அங்கு அதிகாரிகள் ஆற்றல் துறையின் முன்னேற்றம் தொடர்பான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் தேசிய சபையின் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இலங்கை சூரிய சக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு ஆற்றல் உற்பத்தித் திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேசிய சபைக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குழுவுக்கு அறிவித்துள்ளார்.

