அம்கோர் அரச சார்பற்ற நிறுவனத்தின் புதிய வேலைத்திட்ட தெளிவூட்டல் செயலமர்வு!

அம்கோர் அரச சார்பற்ற நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு இன்று (21) திருகோணமலையிலமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்து சிறப்பித்தார்.
மனித வியாபாரத்திற்கெதிராக அரச மற்றும் சமூக மட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதன் மூலம் அச்செயற்பாட்டிற்கு கூடிய அழுத்தத்தை ஏற்படுத்தல் ( Streangthening Government and CSO capacity to combat trafficking in persons to create a greater impact- IMPACT PROJECT) என்பதே இவ்வேலைத்திட்டமாக அமையப்பெற்றுள்ளது. 

மனித வியாபாரம் என்றால் என்ன, இலங்கை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மனித வியாபாரத்தின் போக்கு, மனித வியாபாரத்தை தடுக்க அம்கோர் நிறுவனம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது அம்கோர் நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டன.

மனித வியாபாரம் குறித்தான தெளிவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லல், அரச மற்றும் சமூக மட்ட அமைப்புக்களை இது குறித்து தெளிவூட்டல் , பாதிக்கப்பட்டவர்களை இனங்காணல், அவர்களுக்கு தேவையான சேவை மற்றும் உதவிகளை வழங்கல் மற்றும் மாவட்டத்தல் மனித வியாபாரத்திற்கெதிராக வலுவாக ஒன்றிணைந்து செயற்படல் என்பன இதன் நோக்கமாக உள்ளன. 

மனித வியாபாரத்தினை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆளுநர் கருத்துக்களை பரிமாறியதுடன் மாவட்டத்தில் மனித வியாபாரத்தினை ஒழிக்க பிரதம செயலாளர் தலைமையில் தேவையான பொறிமுறையை ஏற்படுத்துமாறு அறிவுறை வழங்கியதுடன்இதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி.எஸ்.ரட்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல். பி. மதநாயக்க, கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் பீ.முரளிதரன், IOM நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளர் மேரி மயூரன் லம்பேர்ட் , திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply