நாளை அனுராதபுரத்திற்கு சிறப்பு ரயில்!

அட்டமஸ்தானாதிபதி பல்லேகம சிறினிவாச தேரரின் மரண வைபவத்தை முன்னிட்டு விசேட ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி நாளை (22) அதிகாலை 4.40 மணிக்கு தகன நிகழ்வில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்காக கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரத்திற்கு விசேட புகையிரதத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதத்தை பயன்படுத்தி நாடு திரும்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply