
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாவட்டிபுரம் பகுதியில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வாகனம் தீப்பிடித்த போது சாரதி வாகனத்திலிருந்து வெளியேறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீயினால் சிற்றூர்ந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
காங்கேசன்துறை கடற்படைத் தளத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் தலையிட்டுத் தீயை அணைத்துள்ளனர்.
வாகனத்தின் தொழிநுட்பக் கோளாறினால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் காங்கேசன்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்

