ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கந்தவல தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளின் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என சுட்டிக்காட்டிய அவர் வெளிநாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் எமது பொலிஸ் அதிகாரிகளுக்கு போதியளவு சுதந்திரம் வழங்கினால் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.