அச்சுவேலியில் தொடரும் வழிப்பறி : நேற்றும் முதியவரிடம் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை !!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வாள் மற்றும் கத்தி முனையில் முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் முதியவர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லை வெளி பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு வார கால பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இருப்பினும் இதுவரை கொள்ளையில் ஈடுபடும் கும்பலை பொலிஸார் கைது செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

எனவே உரிய தரப்புகள் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply